July 14, 2014

மேல் சுவாச பாதை நோய் தொற்று (URI அல்லது URTI)


மூக்கு, சைனஸ், தொண்டை அல்லது குரல்வளைஇவற்றில் எற்படும் அழற்ச்சி
மேல் சுவாச பாதை நோய் தொற்று (URI அல்லது URTI) எனும் விஷயத்தில் பொதுவாக அடங்கும்:
அவையாவன -
1.அடிநா அழற்சி - Tonsillitis
2. அடி தொண்டை அழற்சி - Pharyngitis
3. குரல்வளையழற்சி - Laryngitis
4. உட்புரையழற்சி - Sinusitis
5. நாசியழற்சி - Rhinitis
6. மூக்கு பாதை, தொண்டை, நாக்கு, உள் நாக்கு, மற்றும் அடிநா அழற்சி - Nasopharyngitis
7. இடைச்செவியழற்சியில் - Otitis media
8.ஜலதோஷம்- Common cold,
9.குரல்வளை மூடியழற்சி-Supraglottitis
10.குரல்வளை, தொண்டை, மற்றும் ஸப்க்ளாட்டிக் (subglottic) பகுதியில் அழற்சி - Laryngotracheitis
11. தொண்டை மற்றும் ஸப்க்ளாட்டிக் (subglottic) பகுதியில் அழற்சி - Tracheitis

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்:
இருமல்,
தொண்டை புண்,
மூக்கு ஒழுகுதல்,
நாசி நெரிசல்,
தலைவலி,
குறைந்த தர காய்ச்சல்,
முக அழுத்தம்
தும்மல்.
அறிகுறிகள் 1-3 நாட்கள் தொற்றுkku பின்னர் தொடங்குகிறது. நோய் பொதுவாக 7-10 நாட்களுக்கு நீடிக்கும் தன்மைக்கொண்டது.

ஹீமோலெடிக் ஸ்ட்ரெப்டோகோக்கல் அழற்சியில் பொதுவாகக் கீழ்கண்ட அறிகுறிகள் காணப்படும் - தொண்டை புண், விழுங்குகையில் தொண்டை வலி, காய்ச்சல்.

தொண்டை வீக்க நோயில் பொதுவாக -மூக்கு ஒழுகுதல், குரல் மாற்றங்கள் அல்லது இருமல் ஏற்படாது.

வலி மற்றும் அழுத்தம் இடைச்செவியழற்சியில் காணப்படும் மற்றும் வைரஸ் விழி வெண்படல அழற்சியில் (Viral conjucntivitis) ஏற்படும் கண் சிவப்பு, பெரும்பாலும் மேல் சுவாச நோய் தொடர்புடையதாக இருக்கிறது.

ஆயுர்வேதத்தில் சிகிச்சை முறைகள்:


நஸ்யம்
தூமபானம் எனும் பஞ்ச கர்ம முறைகள் கொண்டும்..,
தீபனீயம்
பாசனீயம்
அனுலோமனம்
கபச்சேதகம்
வாத கப ஹரம்
விரேசகம்
வாமகம் - போன்ற  மருந்தியல் செயல்களைக் கொண்ட மூலிகை கலவைகள் கொண்டு குணம் கொடுக்கப்படும்.
 
தீபனீயம்,பாசனீயம்,அனுலோமனம்,கபச்சேதகம்,வாத கப ஹரம் போன்ற மருந்தியல் செயல்களைக் கொண்ட மூலிகை கலவைகளால் எமது வைத்திய ஸாலையில் "ஸ்ருங்யாதி" எனும் காப்ஸ்யூல் தந்து மேற்கூறிய நோய்களின் தாக்கத்திற்க்கு இணங்க மருந்தின் அளவினை நிர்ணயம் செய்து தருகின்றோம்.

தேவைப்படுவோர்  Contact Us ( கிளிக்) மூலமாகத் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.







1 comment:

Unknown said...

tnx . its very useful for me.......

Post a Comment