June 29, 2012

Sinusitis / நீர்க்கோவை in Ayurveda



                                 Dr.Bhat.A.Rangaprasad -Sarve janah Sukhino Bhavanthu || Sarve santhu Niramayah ||

முகப்புரை (Introduction) :- 

தலை குகரம் (Sinus Cavity) என்பவை மண்டை ஓட்டினுள்ளே அமையப்பெற்ற, காற்றினால் நிரப்பபெற்ற குகைப் போன்ற ஒரு அறை.(The sinuses are air-filled spaces in the skull.They are present behind the forehead, nasal bones, cheeks, and eyes) 

அவ்வாறான அமைப்புகள் பின் வரும் நான்கு பகுதிகளின் பின்னே ஒளிந்துக்கிடக்கும்- அவையானவை 
(அ) நெற்றி(Frontal Sinus- நெற்றிக்குகரம் ); 
(ஆ) நாசிகை (Nasal Sinus - நாசிக்குகரம்); 
(இ) கன்னங்கள் (Maxillary Sinus -கன்னக்குகரம் ); 
(ஈ) கண்கள் (Sphenoidal Sinus - ஆப்பு குகரம்; Sphenoidal = wedge shaped = ஆப்பு (படம் காண்) = முக்கோண வடிவிலான கருவி
 
மேற்க்கூரிய 4 அமைப்புகளின் அகத்தே உட்புற  சவ்வு chavvu - (Mucous membraneமூடுதோல்) ஒட்டிக்கொண்டிருக்கும். இத்திசையின் பரப்பிலிருந்து தான் சளிப்போன்ற நீர் (Mucous secretion) சுரக்கும்.
That are lined with mucus membranes, which secretes the mucus.

ஆரோக்கியமான குகரத்தினூடே எவ்விதமான பாக்ட்டீரியாப் போன்ற நுண் கிருமிகளும் இராது.
Healthy sinuses contain no bacteria or other germs.

சாதாரணமான சந்தர்ப்பங்களில், சவ்வுப்பகுதியில் சுரக்கும் சளிநீரானது குகரத்தினுள்ளிருந்து மூக்கின் வழியாக வெளியேறி, அக்குகரத்தினுள்ளே காற்று சஞ்சரிக்க ஏதுவாக இருக்கும்.
Normally, the mucus is able to drain out and air is able to circulate.
 
 ஆயின், அக்குகரத்தின் வெளியேற்றுப்பாதையில் ஏதேனும் அடைப்பு  இருக்கப்பெறின்,அதனுள் சுரந்த சளிநீரானது, வெளியேற வழியில்லாது, அவ்விடமே தேங்கித் தேங்கி, நிரம்புகின்றது. ஈங்ஙனம் நிரம்பப்பெற்ற சளி நீரில் பாக்ட்டீரியாப் போன்ற நுண் கிருமிகள், வெகு வேகமாக வளர்ந்து இனப்பெருக்கம் கண்டு, குகரத்தின் சவ்வுதனில்
அழற்சி -யினை(infection & inflammation) உண்டாக்குகின்றது. இப்படியாக தலையில் நீர்க்கோவை தோன்றுகிறது. When the sinus openings become blocked or too much mucus builds up, bacteria and other germs can grow more easily.And thus causes infection & inflammation of the Sinus cavities leading to manifestation of Sinusitis.


 நீர்க்கோவையின் முன் வினைக் காரணிகள் (Predisposing factors of Sinusitis) :-


பின்வரும் காரணிகளைப் புறக்கணிக்கையில் நீர்க்கோவை தோன்றலாம்:(Sinusitis can occur from one of these conditions:)

(அ)  குகரத்தின் மேற்பரப்பில் உள்ள அணு கடத்தி kadaththi (cilia) தனது இயல்பான வேலையான சளிநீரை வெளியேற்றும் பணியினை தக்கவாறு செய்யாமல் முடங்குவது(சில நோய்களில் இது சாத்தியம்).
Small hairs (cilia) in the sinuses, which help move mucus out, do not work properly due to some medical conditions.

(ஆ) மூக்கொழுகுதல் மற்றும் அழற்ச்சியின் காரணமாக அடைப்பு ஏற்படலாம்.
Colds and allergies may cause too much mucus to be made or block the opening of the sinuses.

(இ வளைந்த மூக்கெலும்பு; மூக்கெலும்பு வளர்ச்சி; மூக்கில் சதை வளர்ச்சி உண்டான காரணிகளினாலும் குகரத்தில் அடைப்பு ஏற்படலாம்.
 A deviated nasal septum, nasal bone spur, or nasal polyps may block the opening of the sinuses.

(ஈ )தீவிர  மூக்கழற்ச்சி - Acute Rhinitis

(உ) நீர் ஈரித்தல் Cystic Fibrosis

 (ஊ) கார்டாஜெநர் நோய்க் கலவை  - Kartagener syndrome

(எ) ஆழ் கடல் நீச்சல் - scuba diving



(ஓ) புகைத்தல் - Smoking

(ஔ) மேற் தாடை  பல் அழற்ச்சி - Maxillar Tooth infection

(ஃ) அபல நோயெதிர்ப்பு தொகுப்பு - Weakened immune system

நீர்க்கோவையின் பாதிப்பினை மூவகையாக பிரிக்கலாம் :-

தீவிர நீர்க்கோவை - Acute Sinusitis
மிதமான நீர்க்கோவை - Sub acute Sinusitis
நாட்பட்ட நீர்க்கோவை- Chronic Sinusitis.

நீர்க்கோவையின் அறிகுறிகள் (Symptoms of Sinusitis) :-
  • வாய் துர்நாற்றம் (Bad breath or halitosis)
  •  இருமல் - குறிப்பாக இரவில் அதிகம் (Cough, often bad at night)
  •  ஜுரம் (Fever)
  •  உடல் அயற்ச்சி (Fatigue)
  • அழுத்தமான தலை வலி (Head ache)
  • கண்களின் பின்பக்கம் ஊடுருவும் வலி (Pain behind eyes)
  • பல் வலி ( Tooth ache)
  • முகத்தின் மேல் தொடின் வலி காண்வது ( Facial tenderness)
  • மூக்கடைப்பு ( Nasal congestion)
  •  மூக்கொழுகுதல் (Nasal discharge)
  • தொண்டை கரகரப்பு (Sore Throat)
  • பின்மூக்கொழுகுதல் (Post nasal dribbiling)
ஆயுர்வேதத்தில் நீர்க்கோவை :- (Sinusitis in Ayurveda)

ஆயுர்வேதத்தில் நீர்க்கோவையினை ப்ரதிஷ்யாயம் என்பர்.(Sinusitis is mentioned in Ayurveda as Pratishyayam)
  1. வாத ப்ரதிஷ்யாயம் (Vataja Pratishyayam)
  2. பித்த ப்ரதிஷ்யாயம் (Pittaja Pratishyayam)
  3. கப ப்ரதிஷ்யாயம் (Kaphaja Pratishyayam)
  4. சன்னிபாத  ப்ரதிஷ்யாயம் (Sannipataja Pratishyayam)
  5. நவ ப்ரதிஷ்யாயம் (Nava Pratishyayam)
  6. துஷ்ட ப்ரதிஷ்யாயம்(Dushta Pratishyayam)
என ப்ரதிஷ்யாயங்கள் வகை படுத்தப்பட்டுள்ளன.( are the varieties of Pratishyayam mentioned in the classical texts of Ayurveda).

 சிகிச்சையில் கவனம் கொள்ள வேண்டிய சித்தாந்தங்கள்  (Concepts to be considered while treating) :-
ஆயுர்வேதத்தில் பலதரப்பட்ட மருத்துவ கூட்டுக்கள் (அ) யோகங்கள்  கூறப்பட்டு இருந்தாலும், அவற்றிலிருந்து தேவைக்கு தக்க, தோஷங்களின் அடிப்படைச்  சார்ந்து, மருந்து கலவைகளை உபயோகிப்பின், கிடைக்கப் பெறும், தீர்வானது விரைந்து கிட்டக்கூடியதாகவும், நிரந்தரமானதாகவும் அமைவதில் சந்தேகமில்லை. (The herbal combinations mentioned in Ayurveda under the context of treatment of sinusitis are umpteen.Depending up on the doshas involved, when appropriate medicine is selected by the physician,the relief obtained will be quicker & long lasting.)

கிடைக்கக்கூடிய மருந்துக்கலவைகளிலிருந்து, தோஷத்தின் அடிப்படையில், தக்க  கலவையை, தேர்ந்தெடுப்பது மருத்துவனின் தலையாய பணியாகின்றது.(Selection of the appropriate combination, becomes the primary skill of the physician, based on the clinical observation).

உபயோகத்தில் இருக்கும் சில மருந்து கலவைகள் :- (Certain combinations mentioned under the context & in use) :-

பத்தியா ஷடங்கம் (Pathya shadangam)
பத்திய அக்ஷ தாத்ரி ஆதி (pathya aksha dhatri adi)
தாளீச ஆதி (Thalisa adi)
கற்பூர ஆதி (Karpura Adi)
பிரவாளம் (Pravalam)
தசமூல ஹரீதகீ (Dasamula hareetaki)
தசமூல அரிஷ்ட (Dasamula Arista)
தஷமூல கஷாயம்  (Dasamula Kashayam)
கருத்த குளிகை (Kautha Gulika)
அக்னி குமார ரஸம்(Agni kumara rasam)
ம்ருத்யுஞ்சய ரஸம் (Mruthyunjaya Rasa)
அம்ருதோத்தரம்   கஷாயம் (Amruthothara Kashayam)
ஸ்ருங்க்யாதி சூரணம் (Shrungyadi churnam)
ராஸ்னாதி  சூரணம் (Rasnadi churnam)
கசோராதி சூரணம் (Kachoradi Churnam)
மர்ம குளிகை மற்றும் இன்னும் பல. (Marma Gulika etc.,)

மேற்க்கூறப்பட்ட மருந்துகளில் எவை எவை வாத, பித்த, கப, சன்னிபாத தோஷங்களை தணிக்கும் தன்மை உடையவை, பாதிக்கப்பட்ட நபரில் எந்த தோஷங்கள் வெகுண்டு எழுந்து பிரச்சினையை உண்டு பண்ணுகின்றது என்பதை, ஆய்வு செய்த பின் உட்கொள்ளவோ/ மேற்பூச்சிற்கோ, தரப்படுகையில் குணம் என்பது வெகு தொலைவில் இல்லை. (Of the above said medicines, depending up on the doshic aggravation, when the medicines are adviced amicably, either for internal medication or for external application, one can be sure of the relief from the disease).


"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் 
வாய் நாடி வாய்ப்பச்செயல் " (Proper diagnosis & identification of the aetiology of the disease are most essential before prescribing any medicine for curing the ailment ).






No comments:

Post a Comment